திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மூத்த நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் வள்ளிநாயகம் (55). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (30.04.2021) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்செய்தியை அறிந்த நீதிமன்ற ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும், அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.