Court dismisses The case about  Ramzan's festival

Advertisment

ரம்ஜான் பண்டிகை தினத்தன்று2மணி நேரம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான், மே 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியைகடைப்பிடித்து 2 மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க,தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி திருவாரூரைசேர்ந்த குத்புதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு,நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கு நேரத்தில் அனைத்து மத வழிபாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.