ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Court custody for Rameswaram fishermen; Sri Lanka court order

அண்மையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டிய சம்பவமும், கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால்கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக 16 பேரைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான ராமேஸ்வரம் மீனவர்களில்14 பேருக்கும் நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

fisherman Rameshwaram
இதையும் படியுங்கள்
Subscribe