/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai3_8.jpg)
தடுப்பணைக் கட்டுவது தொடர்பான முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே வேங்கூர், புதுத்துறை, கொள்ளிடம் ஆற்றின் இடையாற்று மங்கலம் பகுதிகளில் தடுப்பணைக் கோரிய வழக்கு இன்று (18/08/2022) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தடுப்பணைக் கட்டக் கோரும் பகுதியின் களநிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டால் பிரச்சனைகள் எழக் காரணமாகி விடும். அதேபோல், அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)