ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகத்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அவசரக் கூட்டம் தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்தில் நடந்தது.பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bar council9.jpg)
இந்தக் கூட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். “இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதற்கான நிதியைத் திரட்டுவதற்காகபார்கவுன்சில் புதிதாக ஒரு கமிட்டி அமைக்கவுள்ளது.
அந்தக் கமிட்டி நிதி வசூலித்து, இறுதியில் தன் பங்கு நிதியைபார் கவுன்ன்சிலில் அளிக்கும். மொத்த நிதியும் வசூலான பிறகு, பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களைத் தமிழகம் முழுவதும் கண்டறிந்து,அவர்களுக்கு பார்கவுன்சில் நிதி உதவி வழங்கும்.இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பார் கவுன்சில் விரைவில் வெளியிடும்”.என அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பார் கவுன்சில் உறுப்பினர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Follow Us