தஞ்சையில் உள்ள பெரியக்கோவிலுக்கு நடத்தப்பட இருக்கும்குடமுழுக்கு விழாவைதமிழில்மட்டும்நடத்த வேண்டும் எனபல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள்வலியுறுத்தப்பட்டன. மேலும் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

Court allows Tamils ​​in Sanskrit in thanjai periyakovil

குறிப்பாகநாம் தமிழர் கட்சியின்மாநிலஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் தரப்பில்உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்றே இது தொடர்பான வழக்குகளில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

கடந்த 28 ஆம் தேதிநடந்தவிசாரணையில்இந்து சமய அறநிலையத்துறைதரப்பில் குடமுழுக்கு விழாவைதமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஎனபதிலளிக்கப்பட்டது. இதனை பிரமாணபத்திரமாக தாக்கல்செய்ய அறநிலையத்துறைக்குஉத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் தஞ்சை பெரியக்கோவிலுக்கு தமிழில்மட்டும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற மனுவைதள்ளுபடி செய்த நீதிபதி, அறநிலையத்துறைஅளித்தபதில்படிதமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த அனுமதி அளித்தார். இந்து சமயஅறநிலையத்துறைஅளித்த அறிக்கைபடிகுடமுழுக்கை நடத்தி அறிக்கை அளித்திட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.