Advertisment

சிறுமி உயிரிழந்த வழக்கு; 8 பேரையும் விடுதலை செய்த நீதிமன்றம்

court acquitted all 8 people in the case second standard child

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாம்பரத்தில், தனியார் பள்ளி பேருந்திலிருந்த ஓட்டையின் வழியாககீழே விழுந்து 2 ஆம் வகுப்புசிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாகபள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Advertisment

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக முறையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி பள்ளித் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 8 பேரையும் விடுதலை செய்யஉத்தரவிட்டுள்ளது.

Advertisment

student tambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe