
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாம்பரத்தில், தனியார் பள்ளி பேருந்திலிருந்த ஓட்டையின் வழியாக கீழே விழுந்து 2 ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக முறையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி பள்ளித் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 8 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.