k

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு தீவிரமாகவே இருந்து வந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த பாதிப்பு காரணமாக கடந்த 9 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கபடாமல் இருந்து வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்த வரும் நிலையில், வரும் 19ம் தேதி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுக்காக பாடத்திட்டத்தில் 40 விழுக்காடு அளவிற்கு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.