மதுரை மேலஅனுப்பானடி அருகேயுள்ள சின்னக்கண்மாய் பகுதியில் தொழிலதிபர் வெற்றிவேல் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Advertisment

courier

கடந்த ஜூன் 27ம் தேதி அவரது வீட்டிற்குள் கொரியர் வழங்குவதுபோல கொள்ளையர்கள் இருவர் சென்றனர். உள்ளே சென்ற அவர்கள் வெற்றிவேல், அவரது மனைவி மற்றும் அவரது மருமகள் ஆகியோர் மீது மிளகாய்பொடியைத்தூவி கட்டிவைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த 46 சவரன் நகை மற்றும் 32 இலட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.

Advertisment

இதைத்தொடர்ந்து வெற்றிவேல் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஆறு தனிப்படை அமைத்து தேடிவந்தனர். தகவல்களின் அடிப்படையில் கொடைக்கானலிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த தினேஷ், ஜஸ்டின் ஆகியோரை கைதுசெய்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில், மதுரை, பெத்தானியாபுரத்தைச்சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் வீரக்குமார் இதற்கு மூளையாக செயல்பட்டார் எனக்கூறினர். அதைத்தொடர்ந்து அவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் 32 இலட்சம் பணம், 46 சவரன் நகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment