Advertisment

''ஜெயலலிதாவிடம் இருந்த துணிச்சல்...'' - 48 மணிநேரத்திற்கு பின் ஆ.ராசா பேச்சு!  

 '' Courage from Jayalalithaa ... '' - A.Rasa speech after 48 hours!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், ''ஜெயலலிதாவிடம் துணிச்சல் இருந்ததால், அவர் இருக்கும்வரை மோடியின் திட்டம் தமிழகத்தில் பலிக்கவில்லை. மத்திய அரசின் 'உதய்' திட்டத்தால் கொஞ்சநாளில் இலவச மின்சாரம் பறிபோகும்'' என திமுக எம்.பிஆ.ராசா பேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு,முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையானதைஅடுத்து, தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கபட்டது. அதையொட்டி, அவர் 48 மணிநேரம்பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை விதித்திருந்தது தேர்தல் ஆணையம். 48 மணி நேரத் தடை முடிந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில்இவ்வாறு பேசியுள்ளார் ஆ.ராசா.

Advertisment

tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe