இறப்பிலும்  இணைபிரியாத தம்பதியினர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளத ஆலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் அருமைநாயகம் (வயது 81), சரோஜா 79 தம்பதியினர்.இவர்கள் இருவரும் உறவினர்கள்.கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் ஆனதில் இருந்து ஒருவருக்கு ஒருவர் அன்யோன்யமாக தங்களது வாழ்க்கையை இனிமையாக கழித்து வந்தனர்.

COUPLES

இருவரும் ஒன்றாகவே இணைந்து விவசாய வேலை மட்டும் அல்லாமல், அனைத்து வேலைகளையும் இணை பிரியாமல் செய்து வந்துள்ளனர். மேலும்,அந்த கிராமத்துக்கு எடுத்து காட்டாகவும் வாழ்ந்துவந்துள்ளனர். இந்நிலையில்,நேற்று அருமைநாயகத்தின் மனைவி சரோஜா திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மனைவி மரணமடைந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அருமைநாயகம், அடுத்த 5 வது நிமிடத்திலேயே மரணத்தை தழுவினார். இதனால் ஆலம்பட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியது. இவர்களது இறுதி சடங்கில் கலந்து கொள்ள, சென்னை பெங்களுர் என பல ஊர்களில் வசிக்கும் ஆலங்குடி கிராமத்தினர் ஆலங்குடி கிராமத்திற்கு வந்துள்ளனர்.

தந்தை பெரியார் ஆலங்குடி கிராமத்திற்கு வந்த போது இறந்த தம்பதியினரின் ஒரே மகளுக்கு அருமை கண்ணு என்று பெயர் வைத்ததை நினைவு

கூறுகின்றனர் ஆலங்குடி கிராம மக்கள்.

incident love villagers
இதையும் படியுங்கள்
Subscribe