Skip to main content

வாழ்விலும் மரணத்திலும் இணைபிரியா தம்பதி...

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

The couple who were together in life and passed away

 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது காசான்கோட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 94 வயது சேது மணியன், இவரது மனைவி 88 வயது கமலம். இந்த தம்பதிக்கு 6 மகன்கள் உள்ளனர். அனைவருடனும் சந்தோஷமாக ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 70 ஆண்டுகள் ஆகிறது. 

 

இவர்களின் ஆறு மகன்கள், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் பெற்ற குழந்தைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறையினருடன் சந்தோஷமாக இருந்துள்ளனர். 

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக சேது மணியன் கடந்த 9ஆம் தேதி இறந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சேது மணியன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அப்போது உறவினர்கள் அனைவரும் அவரது மனைவி கமலத்தை அழைத்து வந்து சேது மணியன் உடல் அருகே அமர வைத்து சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது கணவரின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்த கமலம் திடீரென மயங்கி சரிந்தார். பதட்டம் அடைந்த அவரது பிள்ளைகள் உறவினர்கள் அவரை தூக்கிச் சென்று ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர். பின்னர் சேதுமணியன் உடலை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்தனர். அதன் பிறகு உறவினர்கள், வீட்டுக்கு வந்து மயக்க நிலையில் படுக்க வைத்திருந்த கமலத்தை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை  பரிசோதனை செய்தனர் அதில் அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பின்னர் அவருடைய உடலுக்கு நேற்று காலை இறுதிச் சடங்குகள் செய்து கணவர் தகனம் செய்யப்பட்ட அதே மயானத்தில் கமலத்தின் உடலையும் தகனம் செய்தனர். திருமணமாகி 70 ஆண்டுகள் ஒன்றாக இணைபிரியாத ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து தன் குடும்பத்து பிள்ளைகளிடமும் அப்பகுதி மக்களிடையேயும் சந்தோஷத்தோடு வாழ்ந்துள்ளனர். சேது மணியன் கமலம் தம்பதிகள் வாழ்வில் இணைந்து சாவிலும் இணைபிரியாமல் சென்றதைக் கண்டு ஊர் மக்கள் அவர்களது மன ஒற்றுமையை, ஒருவர் பிரிவை ஒருவர் தாங்கி கொள்ள முடியாத மன உறுதியைக் கண்டு வியந்து போயுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள்; புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Husband lost their life over wife passed away

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.