couple who married for love lost their life

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் சரத்குமார்(34) - மோகன்சுந்தரி(27) தம்பதியினர். சரத்குமார் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். மோகனசுந்தரி நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு சரத்குமார் - மோகனசுந்தரி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் தஞ்சாவூரில் வீடு எடுத்து தங்கி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சரத்குமார் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு மது போதையில் சரத்குமார் இரவு வீட்டில் தூங்கியுள்ளார். ஆனால் இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மோகனசுந்தரி வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அடுத்த நாள் காலை(10.11.2024) சரத்குமார் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது மனைவி தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை தனது உறவினர் ஒருவரிடம் கூறிய சரத்குமார் மனைவி இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட அதே புடவையில் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தஞ்சை கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.