Advertisment

திருமணமான நூறே நாட்களில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த தம்பதி!

திருமணமாகி 100 நாட்களேயான தம்பதி, அதைக் கொண்டாடுவதற்காக குரங்கணி சென்றிருந்தபோது, காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம்சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத்தம்பதி விவேக் மற்றும் திவ்யா. இவர்களுக்கு திருமணம் முடிந்து 100 நாட்களே ஆகின்றன. திருமணத்திற்காக விடுமுறையில் இருந்த விவேக், அடுத்த வாரம் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லவிருப்பதால், அதற்கு முன்பாக சுற்றுலா செல்ல நினைத்து போடி பகுதிக்கு தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

Advertisment

VD

கடந்த மார்ச் 3ஆம் தேதி ‘#100daysmarriagecelebrationwithpondati #temple #DV’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவேக், அதனுடன் கோவிலில் எடுத்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

மார்ச் 5ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் Kolukkumalai Trekking & Camping tour - New age traveller's event என பதிவிட்டிருந்தார். கடைசியாக மார்ச் 10ஆம் தேதி குரங்கணியில் ட்ரெக்கிங் செல்வதற்கு முன்பாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை அவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். ஆனால், ட்ரெக்கிங் சென்ற இடத்தில் காட்டுத்தீயில் சிக்கி புதுமணத்தம்பதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

திருமணமாக 100ஆவது நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற தம்பதி பிணமாக திரும்பியுள்ள நிலையில், அவர்களது உறவினர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர்.

podi Theni Kurangani forest fire
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe