Advertisment

துப்பாக்கியுடன் நள்ளிரவில் வலம்வந்த ஜோடி

Couple walking around in the middle of the night with a gun

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஜோடி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் அலைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆண் பெண் என ஜோடியாக இருவர் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் விதமாக உலா வந்தனர். அப்பொழுது திடீரென இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞர் துப்பாக்கி ஒன்றை எடுத்து யாரையோ நோக்கி சுடுகின்றார். அவர்கள் சுட்டது யாரை என்பது தெரியவில்லை. பின்னர் அங்கிருந்து கிளம்பிய இருவரும் மீண்டும் சிறிது நேரத்திற்கு பின் அதே இடத்திற்குஇருசக்கர வாகனத்தில் வந்து மீண்டும் துப்பாக்கியைக் கொண்டு வருகின்றனர்.

Advertisment

அப்பொழுது நாய் ஒன்று அவர்களை பார்த்து குலைத்தது. இந்த நாயையும் நோக்கிச் சுட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடிகள் யார்? எதற்காக அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர்? யாரை சுட்டனர் என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

gun namakkal new cctv footage rasipuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe