/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_118.jpg)
திருச்சி அருகே பண்ணை வீட்டு முன்பு கட்டிலில் தூங்கிய கணவன், மனைவியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சாரதா. விவசாய நிலத்தில் உள்ள பண்ணை வீட்டில் கணவன், மனைவி இருவரும் நேற்று இரவு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ராஜ்குமார், சாரதா தம்பதியினர் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக்கிடந்தனர். தகவலறிந்துசம்பவ இடத்திற்கு விரைந்த உப்பிலியாபுரம் போலீசார் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை கொலை செய்த மர்ம நபர்களைத்தேடி வருகின்றனர். கணவன், மனைவி இருவரையும் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)