Skip to main content

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த தம்பதி... பதறிய மகன் மற்றும் உறவினர்கள்!! 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

The couple lying in a decapitated position; shocked son and relatives

 

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது அல்லி நகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயது பெரியசாமி மற்றும் அவரது 48 வயது மனைவி. இவர்களது மகன் மருத்துவம் படித்துவிட்டு, பணியின் காரணமாக சென்னையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். பெரியசாமியும், அவரது மனைவி ஆகிய இருவர் மட்டும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு அல்லி நகரத்திலேயே வசித்துவந்துள்ளனர். இவர்களது மகன் முருகானந்தம் சென்னையில் இருந்தாலும், தினசரி காலை மாலை தனது பெற்றோருடன் செல்ஃபோன் மூலம் பேசி விசாரித்துவருவது வழக்கம்.

 

அதன்படி நேற்று (08.06.2021) காலை சென்னையிலிருந்து முருகானந்தம் தாய், தந்தையுடன் பேசுவதற்காக செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஃபோனை எடுத்து யாரும் பேசவில்லை. மீண்டும் ஒருமுறை தொடர்புகொண்டும் அவர்கள் ஃபோனை எடுத்துப் பேசவில்லை. நீண்டநேரம் முயற்சி செய்தும் தாய், தந்தை இருவரும் பேசாததால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம், அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். தனது தாய், தந்தை இருவருமே பலமுறை ஃபோன் செய்தும் செல்ஃபோனை எடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே உடனடியாக எங்கள் வீட்டிற்குச் சென்று பார்த்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவரது உறவினர் அவரது தாய், தந்தை வசித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த வீட்டில் பெரியசாமியும் அவரது மனைவியும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். பதறிப்போன அவர்களது உறவினர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் சொல்லியதோடு, உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த கணவன், மனைவி இருவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவன், மனைவி இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, நகை மற்றும் பணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு கணவன், மனைவி இருவரும் இரவு நேரத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டது குறித்து வேறு ஏதேனும் காரணம் உண்டா, கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் குற்றவாளிகள் யார் என்று இதுவரை தெரியவில்லை. மாவட்டக் காவல்துறை அதிகாரி, தனிப்படை அமைத்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக புகார்; காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Complaint of spreading defamation against Chief Minister in coimbatore

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், அ.திமு.க. நகர 18வது தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்ததாக தெரிகிறது. 

 

இதுகுறித்து, பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான ஷானாவாஸ், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் அருண்குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியும் வந்துள்ளனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணைக்குப் பின்னர், அருண்குமார் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

 

அதிமுக பிரமுகர் அருண்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தைத் தெரிந்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ மற்றும் ஏராளமான அதிமுகவினர் காவல்நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து பரீசீலிப்பதாக கூறினர். அவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அ.திமு.க.வினர் காவல்நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Next Story

காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

 Chief Minister M.K.Stalin surprise inspection at the police station

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பழவந்தாங்கலில் உள்ள காவல் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் மக்களின் புகார்களைக் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார். பின்னர் காவலர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.