Advertisment

கோயிலுக்குள் பிரியாணி சாப்பிட்ட தம்பதி; போலீசார் தீவிர விசாரணை!

Couple eating biryani inside temple police are actively investigating

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகும். நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் கோவிலின் 5ஆம் பிரகாரத்தில் கணவன் மனைவி இருவரும் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலையார் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் அண்ணாமலையாரின் புனிதத்தை கெடுக்கும் வகையில் திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் அவரது மனைவி ஆகிய இருவரும் பிரியாணி பார்சல் வாங்கிக்கொண்டு கோபுரத்திற்கு உள்ளே வந்து ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

Advertisment

இதனை அந்த வழியாக வந்த நபர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் அவர்களை தடுத்து விசாரணைக்காக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் அண்ணாமலையார் கோவிலுக்கு உள்ளே வரும் போது கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இரண்டு நுழைவாயிலில் வழியாக வரும் பக்தர்கள் எடுத்து வரக்கூடிய பைகளை பலத்த சோதனை செய்த பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு இருக்கும் போது ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பிரியாணியை எப்படி கொண்டு வந்தார்கள் என்பது பற்றி தீவிரமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில மாதங்களாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரியாணி வாங்கி சாப்பிட்டது ஆன்மீக பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

police briyani couple temple tiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe