Advertisment

ஆயிரம் மரக்கன்றுகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தம்பதிகள்!

ஆடம்பர பிறந்தநாள் விழாவை தவிர்த்து தனது மகனின் பிறந்தநாள் நினைவாக ரூபாய் 40,000 வரை செலவிட்டு சுமார் 7 அடி உயரமுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவிதமான விலை உயர்ந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்து ஒரு வித்தியாசமான பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்தனர்.

Advertisment

 Couple cutting birthday cake with a thousand trees

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பளையகுஞ்சரம் கிராமத்தில் வசிக்கும் புகைப்பட கலைஞரான வெங்கடேசன் அவருடைய மனைவி நர்மதா பல்லகச்சேரி அரசு பட்டதாரி ஆசிரியை. இவர்கள் இருவரும் தனது பிள்ளையின் பிறந்தநாள் விழாகொண்டாடபணத்தைதேவையற்ற முறையில் செலவு செய்வதை விட மரக்கன்றுகள் நடலாம் என இருவரும் முயற்சித்தனர். இதனால் இருவரும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரிடமும் சந்தித்து கிராமத்தில் உள்ள பொது இடங்களில் வைக்க அனுமதி கேட்டனர்.

 Couple cutting birthday cake with a thousand trees

Advertisment

கிராமமே ஒன்றுகூடி இந்த மகிழ்ச்சியான விழாவை கொண்டாடுங்கள் என சந்தோஷமான செய்தியை சொன்னவுடன் அடுத்த நிமிடமே மரக்கன்றுகளுக்கு அட்வான்ஸ் கொடுத்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார் புகைப்பட கலைஞரான வெங்கடேஷ் அவர்கள். ஞாயிற்றுக்கிழமையான இன்று நாளை சுமார் 10 மணி அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுடன் அவருடைய மகன் ஆருத்ரனின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர்.

பலரும் வந்து இந்த பிறந்தநாள் மற்றும் மரக்கன்ற நடும் விழாவில் கலந்துகொண்டனர்.

birthday street tree
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe