Couple arrested for absconding!

மதுரையில் பெண் சிசுக்கொலை தொடர்பாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

மதுரை உசிலம்பட்டி அருகே பெரியகட்டளையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை மர்மமான நிலையில் இறந்து புதைக்கப்பட்டது.இது பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முத்துப்பாண்டி- கவுசல்யா தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாகவே பிறந்தது. இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி குழந்தை மர்மமான நிலையில் இறந்ததாகக் கூறி பெண் குழந்தையை அடக்கம் செய்தனர். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் சேடப்பட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் முத்துப்பாண்டி- கவுசல்யா தலைமறைவாகினர். இதனால் குழந்தை உயிரிழப்பு சிசுக்கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 29 ஆம் தேதி குழந்தையின் உடலை மீண்டும் எடுத்து பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த முத்துப்பாண்டி- கவுசல்யா தம்பதியினரை உறவினர் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்

Advertisment