The country's 75th Independence Day celebration is a riot!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

நாட்டின் மிக முக்கிய கட்டிடங்கள் தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஜொலித்தன. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், குடியரசுத் தலைவர் மாளிகை செங்கோட்டை, மும்பையின் இந்தியா கேட் ஆகிய கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலித்தன. உச்சநீதிமன்ற கட்டிடம், சென்னையில் உள்ள தலைமைச் செயலகம், விமான நிலையம், சென்னை மாநகராட்சி கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என அனைத்து பகுதிகளும் தேசியக் கொடியின் மூவர்ண விளக்குகளால் அழகு படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலும் தேசியக் கொடியின் வண்ணத்தில் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்தியத் தலைநகர் டெல்லியில் 'ஒவ்வொருவர் கையிலும் தேசியக்கொடி' என்ற முழக்கத்துடன் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவங்கி வைத்தார். இப்படி இந்தியாவின் கர்நாடகா, மேற்குவங்கம், காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.