
திருச்சியில் என்கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி வருகிறார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன். ரவுடி கொம்பன் ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படிதிருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே இருந்த ரவுடி கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் ரவுடி கொம்பன் ஜெகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு ரவுடி கொம்பன் ஜெகன் தப்ப முயன்ற போது போலீசாரால்என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், என்கவுண்டர் நடந்த இடத்தில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண், மாவட்ட காவல்துறை துணை தலைவர் பகலவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டது. நடத்தப்பட்ட ஆய்வில்அந்த இடத்தில் ரவுடி ஜகன் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு, அரிவாள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)