publive-image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைகாக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதிவாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.

Advertisment

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் (வயது 63) நுரையீரல் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மதுரை தனியார் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.காங்கிரஸ் வேட்பாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் எனக்கூறியிருந்தார்.

Advertisment

publive-image

இந்நிலையில் அறிவிக்கப்பட்டபடி மே 2ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றிபெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.