Advertisment

கள்ளச்சாராயம் விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டி.எஸ்.பி.

Counterfeiting issue; DSP moved to waiting list

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப் பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியிலும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்குபதிலாக மதுராந்தகம் டி.எஸ்.பி.யாக திண்டுக்கல் மாவட்டம்,பழனியில் இருந்தசிவசக்தி என்பவர்நியமிக்கப்பட்டுள்ளார்.

Chengalpattu Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe