Skip to main content

அசல் பேப்பரில் கள்ள நோட்டு: அன்னிய சதியா! களமிறங்கிய தேசிய புலனாய்வு முகமை!!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் நெல்லை உளவுப் பிரிவான திட்டமிட்ட குற்றங்களின் புலனாய்வு யூனிட்டின் டீம், நான்கு பேரை மடக்கியதில் அவர்களிடமிருந்து கை மாற்றத் திட்டமிட்டிருந்த 2.93 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைக் கைப்பற்றினர் அந்தக் கும்பல் வந்த ஒம்னி காரையும் பறிமுதல் செய்தவர்கள் அவர்களிடம் முறைப்படி விசாரணை மேற்கொண்டதில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சஸ்பெண்ட் ஆன சிறப்பு எஸ்.ஐ. சண்முகம் ஏஜண்ட் மகாலிங்கம், சங்கர்கணேஷ் மற்றும் ஷெரீப் என்கிற விபரம் தெரிய வந்தது.

இது தொடர்பான செய்தியினை நக்கீரன் இணையதளம் கடந்த வாரம் வெளிப்படுத்தியிருந்தது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஸ்கேனிங் மெஷின், கலர் ஜெராக்ஸ் பிரிண்டர் கட்டிங் சாதனம் போன்றவைகளைக் கொண்டு கள்ள நோட்டு தயாரிப்ப பற்றிய டெமான்ஸ்ட்ரேஷன் செய்து கட்டடும்படி விசாரணை டீம் சொல்ல. அவர்கள் அவைகள் மூலமாக கள்ள நோட்டு தயாரிப்பதைச் செய்து காட்ட நோட்டைப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. காரணம் அது அசல் நோட்டைப் போலிருந்தது.
 

கரன்சிகள் மட்டுமே அச்சடிக்கப் பயன்படும் அந்த வகைப் பேப்பர் தொடர்பான விசாரணைக்குத் தப்பிய கள்ள நோட்டுத் தயாரிப்பு புள்ளியான அசனுக்குத்தான் தெரியும் என்றிருக்கிறார்கள். அவனை ஷேடோ செய்ததில் அவன் கேரளாவில் பதுங்கியது தெரியவர, இந்த சம்பவம் கேரளாவின் கொல்லம் மாநகர் போலீஸ் கமிசனர் அருளுக்குத் தெரியப்படுத்தப்பட்டதில் பேப்பர் பற்றிய சந்தேகமும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
 

 

 

இந்த நிலையில் கேரளாவின் இடுக்கி அணைக்கரையில் மூன்று நாட்களுக்கு முன் போலீஸ் நடத்திய போலீஸ் தணிக்கையில் அந்தப் பகுதியில் திரிந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 லட்சம் மதிப்பிலான நோட்டுக்கள் அத்தனையும் கள்ள நோட்டு என்று தெரியவர, இடுக்கியைச் சேர்ந்த லியோ, கருநாகப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், புற்றடிப் பகுதியின் ரவீந்திரன் என்பது தெரிய வந்திருக்கிறது. அவர்களிடம் நடநத்தப்பட்ட விசாரணையில் அந்தக் கள்ள நோட்டுக்கள் கொல்லத்தில் தயாரிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து கொல்லம் முளங்காடுப் பகுதியின் அந்த ஆடம்பர பங்களாவிற்குள் நுழைந்த தனிப்படை அங்கு ஏழு மணி நேரம் சோதனை நடத்தியதில் அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், பிரிண்டர் இங்க், அடுத்து ரிசர்வ் வங்கியின் போலிசீல், உள்ளிட்டவைகள் பறி முதல் செய்யப்பட்டன.

மேலும் அங்கு அச்சடிக்கப்பட்டிருந்த 57 லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களும் சிக்கியுள்ளன. பார்த்தால் கள்ள நோட்டு என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அசல் ரூபாய் தாள் என்றும் தெரிய வந்திருக்கிறது. அதோடு ஒரு மடங்கு நல்ல நோட்டிற்கு மூன்று மடங்கு கள்ள நோட்டுக்களை சப்ளை செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. என்று சொல்கிற கொல்லம் போலீசார், அந்தப் பங்களாவின் உரிமையாளரான மலையாள சீரியல் நடிகை சூர்யா சசி. அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

இதில் குறிப்பிடும்படியான கள்ளக் கரன்சி அச்சடிக்கப்பயன் படுத்தப்பட்ட அசல் பேப்பர் பற்றிய சந்தேகம் கொல்லம் கமிசனர் அருளுக்குத் தெரியப்படுத்த அவர் நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் கள்ள நோட்டுச் சம்பவம், அடுத்து கொல்லம் பற்றியும், என்.ஐ.ஏ. எனப்படும் வெளி நாட்டுக்குச் சதியை அறியும், தேசிய புலனாய்வு முகமைக்குத் தெரியப்படுத்தியவர், அந்தப் பேப்பர் பற்றிய வெளி நாட்டு நெட்ஒர்க் பற்றியதையும் குறிப்பிட, தற்போது தேசிய புலனாய்வுமை முகமை தனது விசாரணையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து பேப்பர் பற்றிய அதிர வைக்கும் நெட் ஒர்க் வெளி வரலாம் என்கிறார்கள் விசாரணை அமைப்பினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.