Counterfeit note gang caught by water bottle!

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சேர்ந்தவர் முருகையன் மகன் தமிழரசன்(58). இவர் தி.இளமங்கலத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். மார்ச் 10ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கடைக்கு வந்த பெண் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து வாட்டர் பாட்டில் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை வாங்கிச் சென்றார். சிறிதுநேரம் கழித்து கடைக்காரர் தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் 500 ரூபாய் நோட்டை சோதனை செய்தபோது அது கள்ளநோட்டு எனத் தெரியவந்தது. இதுகுறித்து தமிழரசன் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது கள்ளநோட்டை கொடுத்து பொருட்களை வாங்கியது வதிஷ்டபுரத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், அவருக்கு உடந்தையாக திட்டக்குடி நடுவீதியைச் சேர்ந்த செந்தில்குமார்(47) என்பவர் இருந்ததும் தெரியவந்தது.

Advertisment

Counterfeit note gang caught by water bottle!

Advertisment

இருவரது வீடுகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 26 ஆயிரத்து 500 ரூபாய் கள்ளநோட்டை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் கள்ள நோட்டுகளை யாரிடமிருந்து வாங்கினார்கள்என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.