Skip to main content

தீபாவளி பர்ச்சேஸை குறிவைத்த கள்ளநோட்டு கும்பல்...  விசாரணையில் அதிர்ச்சி!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

கோவையில் தீபாவளி பண்டிகையை குறிவைத்து கள்ளநோட்டுகளை புழகத்தில் விடவும், பெண்கள் வயதானவர்களிடம் கள்ளநோட்டுகளை மாற்றவும் கள்ளநோட்டு கும்பல் திட்டமிட்டிருந்தது குறித்த அதிர்ச்சி தகவல் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Counterfeit mob targeting Diwali Purchase ... Shock at trial!

 

கோவை காந்திபார்க் பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருபவர் ஜான் ஜக்கோ. வழக்கம்போல் கடையை திறந்து விற்பனை செய்து வந்த நிலையில், இருவர் பத்து ரூபாய்க்கு பெவிஸ்டிக் வாங்கி அதற்கான பணமாக ரூ.100 கொடுத்துள்ளனர். 100 ரூபாய் தாள் கள்ளநோட்டாக இருக்குமா என்ற அச்சத்தில் சந்தேகமடைந்த கடைக்காரர் ஜானிடம் கேட்டபோது இருவரும் அங்கிருந்து ஓடப்பார்த்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் உதவியால் தப்பி ஓட முயன்ற இருவரை பிடித்த ஜான், ஆர்.எஸ்.புரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

 

Counterfeit mob targeting Diwali Purchase ... Shock at trial!

 

இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பூபதி என்பது தெரியவந்தது. இருவரிடமிருந்து, ரூ.3100 மதிப்பிலான 31 நூறு ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில்,  கோவை இடிகரையில் வசித்து வரும் தன்ராஜ் என்பவர் கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்தது தெரியவந்தது. தன்ராஜிடமிருந்து, பிரவீன், பூபதி மட்டுமின்றி கோவை கணபதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரும் கள்ளநோட்டுகளை பெற்று புழக்கத்தில் விட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தன்ராஜ் மற்றும் ரஞ்சித் இருவரையும் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் பெருமாள் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, 14 லட்சத்து 9 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும், கள்ளநோட்டுகளை அச்சடித்த இயந்திரம், இங்க் போன்றவற்றையும் தன்ராஜிடமிருந்து கைபற்றினர்.

 

Counterfeit mob targeting Diwali Purchase ... Shock at trial!

 

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தன்ராஜ் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி எலக்டீரிஷியன் பணி செய்து வருகிறார். கம்ப்யூட்டர் மூலமாக ஸ்கேன் செய்து பக்கவாக புதியதாக வெளீயிடப்பட்டுள்ள  ரூபாய் 20, 50, 100, 2000 மதிப்பிலான நோட்டுகளை பிரிண்டர் முறையில் தயாரித்து கொடுத்ததும், தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறிப்பாக தீபாவளி பண்டிகையை குறிவைத்து கள்ளநோட்டுகளை புழகத்தில் விடவும், பெண்கள், வயதானவர்களிடம் கள்ளநோட்டுகளை மாற்றவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இருவருக்கு வலைவீசி உள்ளதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தன்ராஜ் மீது ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு கள்ளநோட்டு வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.