திருவாரூர் பகுதியில் பாக்கெட் மற்றும் கள்ளச்சாராயத்தின் விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. சாராயம் விற்பவர்களை கைது செய்ய வேண்டுமென, பாக்கெட் சாராயத்தைை சாலையில் உடைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

protest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திருவாரூர் அருகே நாகக்குடி ஊராட்சி உட்பட்ட பன்னைவிளாகத்தில் ரவி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாக்கெட் சாரயத்தை விற்பனை செய்துவருகிறார். அந்த சாரயத்தை சிறுவர்கள் உட்பட பலரும் வாங்கிக்குடித்து

பாதிக்கப்படுகின்றனர். சாராயத்தை குடித்த சில உயிர் இழப்பும் நடந்துள்ளது. இதைபொதுமக்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாககாவல்துறையிடமும் புகார் அளித்துள்ளனர், ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாக்கெட் சாராயம் விற்பனை செய்த ரவி, பாரதிமோகன், நெடுமாறன் உள்ளிட்டவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் தப்பியோடி விட்டனர்.

Advertisment

பின்னர் அவர்கள் வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட வெளிமாநில பாக்கெட் சாரயத்தை பொதுமக்கள் கைப்பற்றி மூவரையும் உடனே கைது செய்ய கோரி பாக்கெட் சாராயத்தை சாலையில் உடைத்து சாலை மறியலில்ஈடுபட்டனர். அங்குவந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கைஎடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள்கலைந்து சென்றனர்.