கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பல்வேறு இடங்களிலும் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் கள்ளச்சாராயம் குறித்து போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சேஷசமுத்திரம் பகுதியில் விவசாய நிலத்தில் ராஜேந்திரன் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாகக் கூறப்படுகிறது. அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு செய்த பொழுது ராஜேந்திரன் கேஸ் அடுப்பு பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதோடு சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜேந்திரனை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.