
அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் பள்ளி மாணவர்களைக் கொண்டு ஆலோசனை வழங்க ஆலோசனைமையங்கள்அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும், வழிகாட்டுதல்களை வழங்கவும் ஆலோசனை மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த ஆலோசனை மையம் அமைப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 'மாணவர்களின் ஆர்வத்தை அறிந்துகொண்டு அவர்களுடைய ஆர்வத்திற்கு ஏற்றவாறு என்னென்ன படிப்புகள் இருக்கின்றது, எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பத்தை பற்றி வழிகாட்டுவதற்காக ஆலோசனை மையமாக இந்த ஆலோசனை மையங்கள் இருக்கும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து 3.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us