Advertisment

'என் வார்டுக்கு எதுவுமே பண்ணல' - மீம்ஸ் பேனர் காட்டிய கவுன்சிலர்

nn

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனது தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை என மீம்ஸ் பேனர் காட்டிய பாஜக கவுன்சிலரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில் 27வது வார்டு பாஜக கவுன்சிலர் ஹர்ஷா ரெட்டி என்பவர், தன்னுடைய வார்டில் எந்த பணிகளும் செயல்படுத்தப்படவில்லை...நிதியும் ஒதுக்கவில்லை என்றகுற்றச்சாட்டை வைத்ததோடு, நிதியை ஒதுக்குங்கள் இல்லைன்னா எங்கள் வார்டைஒதுக்கப்பட்ட வார்டாக அறிவியுங்கள். நான் மக்களிடம் திமுக அரசு எதுவுமேசெய்யவில்லை எனச்சொல்லி விடுகிறேன்என்று கூறியபடியேமீம்ஸ் பேனர் ஒன்றையும் எடுத்து நகர மன்ற கூட்டத்திலேயே காண்பித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதால் நகர்மன்ற கூட வளாகமே பரபரப்பில் மூழ்கியது.

Advertisment

ambur councilor thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe