Skip to main content

'என் வார்டுக்கு எதுவுமே பண்ணல' - மீம்ஸ் பேனர் காட்டிய கவுன்சிலர்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனது தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை என மீம்ஸ் பேனர் காட்டிய பாஜக கவுன்சிலரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில் 27வது வார்டு பாஜக கவுன்சிலர் ஹர்ஷா ரெட்டி என்பவர், தன்னுடைய வார்டில் எந்த பணிகளும் செயல்படுத்தப்படவில்லை... நிதியும் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்ததோடு, நிதியை ஒதுக்குங்கள் இல்லைன்னா எங்கள் வார்டை ஒதுக்கப்பட்ட வார்டாக அறிவியுங்கள். நான் மக்களிடம் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை எனச் சொல்லி விடுகிறேன் என்று கூறியபடியே மீம்ஸ் பேனர் ஒன்றையும் எடுத்து நகர மன்ற கூட்டத்திலேயே காண்பித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதால் நகர்மன்ற கூட வளாகமே பரபரப்பில் மூழ்கியது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அடுத்தடுத்து நடந்த கொடூர விபத்து; ஒருவர் மரணம், 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
back-to-back car accident near Ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஏலகிரி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஏலகிரி பகுதியைச் சேர்ந்த திலகம்(60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் வெங்கட்ராமன்(67) மற்றும் மகன் பிரகதீஸ்வரன்(35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைப் பின் தொடர்ந்து வந்த தனியார் பேருந்து சாலையில் நின்றதால் அதனைக் கவனிக்காமல் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொள்ள சென்ற மற்றொரு தனியார் மினி வேன், ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் மினி வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனம் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறயினர் போக்குவரத்தை சீர் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கார் விபத்தில் இறந்த திலகம் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 ஏழு பேருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு. மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.