/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/High Court Madurai Bench.jpg)
அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல், சட்டவிரோதம் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகையில் சிறப்பு பறக்கும் படையை அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றக் கிளையின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வேலை எளிதாக நடக்கிறது என்பதால், சாதாரண மனிதர்களும் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர் என்று கவலைதெரிவித்துள்ளனர்.
மேலும்,இந்த வழக்கு தொடர்பாகமத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்திற்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Follow Us