jl

அருப்புக்கோட்டை நகராட்சி முறைகேடுகள் குறித்து அக்டோபர் 10-ஆம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க ரூ 5 லட்சம் முதல் ரூ 7 லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், டெண்டர் விடுவதில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாகவும், பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர், நகராட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும், மின் மயானம், சாலை உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் நடப்பதாகவும் குறிப்பிட்டனர். நகராட்சி சேர்மன் சுந்தரலட்சுமி மற்றும் அவருடைய கணவர் சிவப்பிரகாசத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Advertisment