Skip to main content

ஊழல் தடுப்புத்துறையில் ஊழல் மோசடி! -தடுத்த பெண் ஊழியருக்கு தொடரும் நெருக்கடி!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018


 

 

petrol

                                                                 எக்ஸ்ட்ரா கோட்டா மோசடி ஆதாரம்


     டி.வி.ஏ.சி. எனப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உயரதிகாரி மீது… அதே துறையில் பணியாற்றும் பெண் எஸ்.பி. கொடுத்த புகார் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில்…  “ஊழலைத் தடுக்கவேண்டிய எங்களது துறையிலேயே நடக்கும் ஊழல் மோசடி குறித்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நக்கீரன்தான்  அம்பலப்படுத்தணும்” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து குமுறுகிறார் அதேத்துறையில் 25 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கும் இன்னொரு பெண்.  
 

என்ன ஊழல் மோசடி நடக்கிறது? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனரகத்தில் (Directorate of Vigilance and Anti-Corruption) நிர்வாகப்பிரிவில் பணிபுரிந்துகொண்டிருக்கும் எலிசெபத் ஷீபாலினிடம் நாம் கேட்டபோது, “டி.வி.ஏ.சி. துறையின்  நிர்வாகப்பிரிவில்  உதவியாளராக  இருந்ததால்  லஞ்ச ஒழிப்பு போலீஸ்  உயரதிகாரிகளின்  வாகனங்களுக்கு  பெட்ரோல் டீசல் போட்டதற்கான கணக்கு வழக்குகளையும் பார்க்கவேண்டியிருக்கும். அனுமதிக்கப்பட்ட  அளவைவிட  அதிகமாக  பெட்ரோல்  டீசல்  போட்டால் அதற்கான  காரணத்தை  அரசுக்கு தெரிவித்து  டி.வி.ஏ.சி.  இயக்குனர் அல்லது இணை/ துணை இயக்குனர்கள்  மூலமாக  அரசிடம்  ஒப்புதலுக்கு (ratification proposal) அனுப்பி  அரசின்  பின்னேற்பாணை  பெற வேண்டும். அந்த,  ப்ரபோசல்  அரசால்  நிராகரிக்கப்படும்  பட்சத்தில்  எக்ஸ்ட்ரா கோட்டா (கூடுதல்) பெட்ரோல்,  டீசலுக்கான  தொகையை அரசின்  நிதிக் கணக்கில் செலுத்த வேண்டும்.  
 

அனைத்துத்துறைகளிலும் இதுதான் நிலைமை.  ஆனால்,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளோ  இந்த ‘எக்ஸ்ட்ரா கோட்டா’ பெட்ரோல், டீசல் தொகையை அரசுக்கு கட்டுவதும் இல்லை; அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்புவதும் இல்லை; அரசின் ஒப்புதல் ஆணையை பெறுவதும் இல்லை.  இவர்களே, ஒரு  படிவத்தில் எழுதி  இவர்களே  ஏற்றுக்கொண்டதுபோல்  விஜிலன்ஸ் ஆஃபீஸிலேயே வைத்துக் கொள்வார்கள். சைதாப்பேட்டை சம்பள கணக்கு கருவூலம்(தெற்கு) அலுவலகத்தில் எக்ஸ்ட்ரா கோட்டா  பெட்ரோல், டீசல் பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு எரிபொருள் பில்லை பாஸ் பண்ணி விடுவார்கள்.  அக்கவுண்ட்டன்ட் ஜெனரல் ஆஃபீஸ் ஆடிட்டிலும், லோக்கல் ஃபண்டு  ஆடிட்டிலும்  எதுவும்  இதுகுறித்து கண்டுகொள்வதில்லை. அதுமட்டுமல்ல, ஒரு வண்டிக்கு  பிடித்தம்  செய்யும்  பெட்ரோல்,  டீசல் கணக்கை  ஒயிட்னர்  போட்டு  மாற்றி மிக குறைவாக பெட்ரோல், டீசல் பிடித்த வண்டியின் கணக்கில் முறைகேடாக கணக்கு காட்டுவதும் நடக்கிறது.  இதுகுறித்து, நான்  கேள்வி  எழுப்பியதால்தான் எனது நிர்வாக அதிகாரியாக இருந்த சாரதா  மூலம் எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து கண்காணிப்பாளராக வரக்கூடிய எனது பதவி உயர்வையே தடுத்துவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டியவரிடம்,
 

“இதையெல்லாம் காரணம் காட்டி பதவி உயர்வை தடுக்கமுடியுமா?” என்று நாம் கேள்வி எழுப்பியபோது,  “2006 ஆம் ஆண்டு எனக்கு கடுமையான வேலை நெருக்கடி இருந்ததால் கான்ஃபிடன்ஷியல் பிராஞ்சிலிருந்து  வேறு பிரிவுக்கு மாற்றப்படவேண்டும் என்பதற்காக சீனியாரிட்டியை விட்டுத்தருவதாக கடிதம் கொடுத்துவிட்டேன். ஆனால், என்னைப்போலவே  நிர்வாக அலுவலர் சாரதா உள்ளிட்டவர்கள் பலர் கான்ஃபிடன்ஷியல் பிராஞ்சுக்கு சென்று வேலை செய்யமுடியாமல் திரும்பவும் நிர்வாக பிரிவுக்கு 5 வருடத்திற்குள் வந்தால் ஒரிஜினல் சீனியாரிட்டி பாதிக்காது என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஒரிஜினல் சீனியாரிட்டி அடிப்படையிலேயே புரோமோஷன் கொடுக்கப்பட்டது என்ற தகவல்.  அப்படியிருக்க, நான் மட்டும் ஏன் சீனியாரிட்டியை விட்டுத்தரவேண்டும்?  எனது ஒரிஜினல் சீனியாரிட்டியிலேயே  நீடிக்க  விரும்புகிறேன்  என்று கடிதம் கொடுத்துவிட்டேன்.  ஆனால், என் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் உயரதிகாரிகளின் தூண்டுதலால் நான் முதலில் கொடுத்த கடிதத்தைவைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து,  இடையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருந்த என்னை மீண்டும் உதவியாளராக பணியிறக்கம் செய்துவிட்டார்கள்.

 

petrol


                                                                                    எலிசெபத் ஷீபாலின்

அதோடு, விட்டிருந்தால் பரவாயில்லை. என்னுடைய நீதிமன்ற வழக்கு ஃபைல் காணாமல் போய்விட்டதாக காரணம் கூறி புதிய ஃபைலை தயாரிக்கும்போது   2014 ஜூன்  17-ந்தேதி தேதியிலிருந்த ஆணையையும்,  அலுவலக குறிப்பு எனப்படும்  ஆஃபிஸ் நோட்டையும்,  மோசடியாக மாற்றி   புதிய ஃபைல் தயாரித்துவிட்டார்கள்.  இதனால், 2017 ஆண்டும் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறமுடியவில்லை.  மேலும், என்னை விட பல வருடங்கள்  ஜூனியர்களான தேவி, சாந்தி ஆகியோருக்கு முறைகேடாக கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கி விட்டனர்.  
 

இதுகுறித்து,  2018 ஏப்ரல்  மாதம்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் மோகன் பியாரே (விஜிலென்ஸ் கமிஷனர்) உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்துவிட்டேன்.  இதுகுறித்து,  இணை இயக்குனர் முருகன் ஐ.பி.எஸ். அழைத்து பேசினார்.  ‘உங்கள் தகவல் மற்றும் க்ரீவன்ஸ் மனு, வழக்கறிஞர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.  அவர்கள், உங்களுக்கு பதவி உயர்வு தரச்சொல்லி பரிந்துரைத்தால்  தந்துவிடுவோம்’ என்றார்.  ஆனால்,  ஐந்து மாதங்கள் ஆகியும்  இதுவரை  எந்த பதிலும் இல்லை.  இந்த வருடமும் சீனியாரிட்டி பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை விட 15 வருட ஜூனியர்கள் இருவரின்  பெயர்களை  கண்காணிப்பாளர்  பதவி சீனியாரிட்டி பட்டியலில் பெயரை சேர்த்து  ஆணை வெளியிட்டுவிட்டார்கள்.  ஆனால், இதுகுறித்து எனது புகார் மனுக்களுக்கு இதுவரை ஆரம்பக்கட்ட விசாரணைகூட செய்யவில்லை. இப்படியிருந்தால், ஊழல் மோசடிகளை தட்டிக்கேட்கவேண்டும் என்ற எண்ணம் எந்த அரசு ஊழியருக்கு வரும்?” என்று குற்றம்சாட்டி கேள்வி எழுப்புகிறார்.

 

petrol

 

இதுகுறித்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் உயரதிகாரியிடம் கேட்டபோது, பெயர் வேண்டாம் என்று தவிர்த்த அந்த அதிகாரி, “எலிசெபத் ஷீபாலினின் பதவி உயர்வில் அவருக்கு வேண்டப்படாதவர்கள் அவருக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டுக்கிறார்கள் என்று தெரியவருகிறது. அதனால், அவரது பதவி உயர்வு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வோம். அரசுதான் முடிவெடுக்கவேண்டும். பெட்ரோல் டீசலில் நடக்கும் மோசடிகள் குறித்து அவர் சொல்லும் புகார்கள் உண்மையா? பொய்யா? என்று விசாரித்து நடவடிக்கை எடுப்போம்” என்றார். 

 

ஊழலை தடுக்கவேண்டிய அதிகாரிகளே ஊழல் மோசடிகளை செய்துவதும் கேள்வி எழுப்புகிறவர்களை பழிவாங்கினால் சமூகத்தில் நடக்கும் ஊழல்களை எப்படி தடுப்பார்கள்?
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது’ - மக்களவையில் மத்திய அரசு திட்டவட்டம்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

'Petrol diesel price cannot be reduced'- central government plan

 

பெட்ரோல், டீசல் விலை ஏறப்போவது குறித்து கடந்த டிச.12 ஆம் தேதி நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், 2017 ஆம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோலிய விலை நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன் இனி தினசரி கச்சா எண்ணெய் விலையேற்ற இறக்க சூழலுக்கேற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்குமென்று அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். 

 

இந்த அறிவிப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல் சிறிது சிறிதாகவே உயர்த்தப்படுமென்றும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறையவும் செய்யுமென்றும் தெரிவித்தார். இதனால் நுகர்வோர்களுக்கு நல்லதொரு பயனளிப்பதாக இருக்குமென்றும் கூறினார். அப்போதைய காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மக்களைப் பெரிதும் பாதிக்காததாக இருந்தது. 

 

பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இதைவிடக் குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உயர்த்திக்கொண்டே சென்றார்கள். அதேபோல், கொரோனா ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குப் போனபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. கொரோனாவுக்குப் பின்னரும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசைக் கேள்வியெழுப்பும் போதெல்லாம், இதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை; எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவெடுக்குமென்று கூறினார்கள். ஆனால், எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டாலோ, இதெல்லாம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் தான் கேட்க வேண்டுமென்று கூறின. 

 

ஆனால், இதில் உண்மை என்னவெனப் பார்த்தால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கே இதுகுறித்த மறைமுகப் பவர் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியென்றால், இந்தியாவில் எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை சிறிது நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். 

 

தற்போது குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும் ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இதையெல்லாம் கவனிக்கும்போது இந்த விலையேற்ற இறக்கங்களில் பெட்ரோலிய அமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலையேற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய  முடிகிறது. எனவே, தற்போது இரு மாநிலத் தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியிருந்தோம்.

 

'Petrol diesel price cannot be reduced'- central government plan

 

இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், “2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது குறைந்த அளவில்தான் உள்ளது. 1974 ஐ ஒப்பிடும்போது கடைசி எட்டு ஆண்டுகளில் விலையேற்றம் என்பது மிகக்குறைவுதான்.  பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது” எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறியும், மத்திய அமைச்சரின் இந்தப் பதிலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

 

 

Next Story

பெட்ரோல் விலை அதிரடியாக உயரப்போகும் அபாயம்!

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

தெ.சு. கவுதமன்

 

Risk of sudden rise in petrol price!!

 

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைப் பொறுத்தவரை முன்பெல்லாம் ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கக்கூடிய முறையே இருந்து வந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் தான் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்படும். ஆனால் 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோலிய விலை  நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன் இனி தினசரி கச்சா எண்ணெய் விலையேற்ற இறக்க சூழலுக்கேற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்குமென்று அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். 

 

இந்த அறிவிப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல் சிறிது சிறிதாகவே உயர்த்தப்படுமென்றும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறையவும் செய்யுமென்றும் தெரிவித்தார். இதனால் நுகர்வோர்களுக்கு நல்லதொரு பயனளிப்பதாக இருக்குமென்றும் கூறினார். அப்போதைய காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மக்களைப் பெரிதும் பாதிக்காததாக இருந்தது.  

 

ஆனால் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இதைவிடக் குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உயர்த்திக்கொண்டே சென்றார்கள். அதேபோல், கொரோனா லாக்டௌன் காலத்தில் கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குப் போனபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. கொரோனாவுக்குப் பின்னரும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசைக் கேள்வியெழுப்பும் போதெல்லாம், இதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை; எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவெடுக்குமென்று கூறினார்கள். ஆனால் எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டாலோ, இதெல்லாம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் தான் கேட்க வேண்டுமென்று கூறின. 

 

ஆனால், இதில் உண்மையென்னவெனப் பார்த்தால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கே இதுகுறித்த மறைமுகப் பவர் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியென்றால், இந்தியாவில் எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் விலை சிறிது நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா, சிக்கிம் மாநிலத் தேர்தல்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் விலையில் மாற்றமில்லாமல் வைத்துக்கொண்டார்கள்.  

 

2020ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத் தேர்தல் வந்தபோதும் அதற்கு முன்பாக ஒன்றரை மாத காலத்துக்கு பெட்ரோல் விலை மாறாமல் பார்த்துக்கொண்டார்கள். அதேபோல், மேற்கு வங்கத்துக்கு 2021ஆம் ஆண்டில் தேர்தல் வந்தபோது தேர்தலுக்கு முந்தைய ஒரு மாத காலத்துக்கு பெட்ரோல் விலை மாறாமல் பார்த்துக்கொண்டார்கள். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து மாநிலத் தேர்தல் நடந்தபோது தேர்தலுக்கு முந்தைய 4 மாதங்களுக்கு விலையேறாமல் பார்த்துக்கொண்டனர். 

 

தற்போது குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும் ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.  இதையெல்லாம் கவனிக்கும்போது இந்த விலையேற்ற இறக்கங்களில் பெட்ரோலிய அமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலையேற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய  முடிகிறது. எனவே, தற்போது இரு மாநிலத் தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.