Advertisment

காட்டுக்குள் கிடந்த இளைஞர்களின் சடலம்; போலீசார் தீவிர விசாரணை!

The corpse of the youth lying in the forest in pudukottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள அரியாணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசைத்தம்பி. இவரது மகன் ராஜேஷ் (20) ராஜேஷ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (26) ஆகிய இருவரும் நேற்று இரவு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை வரை இவர்கள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் காட்டுப் பகுதியில் தேடியுள்ளனர்.

அதே நேரத்தில், கோமாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தைலமரக் காட்டுக்குள் இரு இளைஞர்கள் சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில், அங்கு சென்று பார்த்த உறவினர்கள் கதறி அழுததுடன் கந்தர்வக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும், இறந்தவர்களின் உடலில் மின்சாரம் தாக்கிய காயங்கள் இருந்ததால் கோமாபுரம் பகுதியில் பன்றிக்காக விவசாயிகள் அமைத்துள்ள மின் வேலியில் சிக்கி இருவரும் இறந்த நிலையில் அதனை மறைக்க யாரோ மர்ம நபர்கள் இருவரது சடலங்களையும் நடுக்காட்டுக்குள் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும், எந்த தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் சடலங்களை யார் கொண்டு வந்து போட்டது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இதற்கிடையில், சடலமாக கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், கந்தவர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவர், மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.

corpse forest police Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe