/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2859.jpg)
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக ஆட்டோ டிரைவர் ஒருவரை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. நடந்து முடிந்த நகர்ப்புறத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று பதவி ஏற்றுகொண்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் 21 நகாரட்சிகளையும் திமுக கைப்பற்றியிருக்கும் நிலையில், 20 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தை காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் மாநகராட்சிக்கான மேயர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோயில் நகரமான கும்பகோணத்தை தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைக்கபட்டுவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநகராட்சி ஆனபிறகு நடந்த முதல் தேர்தல் என்பதால் முதல் மேயர் யார் என்கிற எதிர்ப்பார்ப்பு திமுக வட்டாரத்தில் எழுந்தது. கும்பகோணம் மாநகர் பொருப்பாளர் சு.ப.தமிழழகனுக்கு மேயர் வாய்ப்பு அதிகம் என பலதரபட்ட மக்களிடமும் பேசப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மேயர் வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநராக இருந்துவரும் சரவணன் என்பவரை அறிவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. சரவணன் கும்பகோணம் துக்காம்பாளைத்தை சேர்ந்தவர், அவரது தந்தை கந்தசாமி. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் சரவணன் காங்கிரஸ் கட்சியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவருகிறார். நகர துணை தலைவராகவும் இருந்துவருகிறார். இன்றுவரை சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிவருகிறார். "மேயராகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு கனவிலும்கூட நினைக்கல," என்கிறார் சரவணன்.
“சாதாரணகுடும்பத்தில் தினசரி வருமானத்துக்கே சிரமப்படும் எங்க குடும்பத்துக்கு இப்படியொரு கவுரவம் கிடைக்கும்னு கனவிலும் நினைக்கல,இந்த தேர்தலில்தான் முதன் முறையாக போட்டியிட்டார்.வெற்றி பெற்றதுமே மேயராக அறிவித்திருப்பது அளவிடமுடியாத சந்தோஷமாக இருக்கு" என்கிறார் சரவணனின் மனைவி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)