Advertisment

பிரியாணி கொடுக்க குப்பை வண்டியில் ஆட்களை அழைத்து வந்த மாநகராட்சி ஊழியர்கள்

Corporation employees who brought people in a garbage truck to give biryani

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்அவர்களின் பிறந்தநாள் விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வேலூர் பாராளுமன்றத்தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளையும் பிரியாணியும் வழங்கினார்.

Advertisment

பிரியாணி வாங்குவதற்கு பெரிய அளவில் ஆட்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் மாநகர எம்.எல்.ஏ கார்த்தி, துணை மேயர் சுனில் ஏற்பாட்டில் ஏரியாக்களில் இருந்து ஏழை மக்களை அழைத்துவந்தனர். அப்படி வந்தவர்களை வேலூர் மாநகராட்சி குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டனர் மாநகராட்சி ஊழியர்கள். அரசு வாகனத்தில் அதுவும் குப்பை வண்டியில் பொதுமக்களை ஏற்றி வந்தது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது

Advertisment

Corporation employees who brought people in a garbage truck to give biryani

தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கச்செல்லும் பொழுது பணம், பிரியாணி, வாட்டர் பாட்டில், சரக்கு எனத்தந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மக்களை அழைத்து வந்த இதே. நபர்கள். இப்போது ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு இப்படி குப்பை வண்டியில் ஏற்றி வருகிறார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

kalaignar Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe