கரோனா தீவிர பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், அரசு சார்பில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அரசு மருத்துவமனை வரை செல்ல வேண்டிய நிலை உள்ள நிலையில், இதனைக் கருத்தில் கொண்டு வீதி வீதியாகச் சென்று மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன், விருப்பமுள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் கரோனோ தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருமாறு ஒலிபெருக்கி கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் ழைப்பு விடுத்தனர்.