சென்னை வடக்கு மாவட்ட திமுக உள்ளடக்கிய ராயபுரம், ஆர். கே. நகர், பெரம்பூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி மாமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. முதல்வர் ஆணைக்கிணங்க காலை 9-11 மணி வரை பெரம்பூர் தொகுதிக்கும், 11.30-1.30 மணி வரை ஆர்.கே.நகர் தொகுதிக்கும் மற்றும் 3-5மணி வரை ராயபுரம் தொகுதிக்கும் என அறிவித்த அட்டவணைப்படி நேர்காணல் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட இந்த நிகழ்வானது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மேற்பார்வையிலும், கலாநிதி வீராசாமி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரிம் .ஆர். மூர்த்தி, ஜே.ஜே. எபினேசர், ஆர். டி. சேகர் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது.

Advertisment