மாநகராட்சி தேர்தல்: விருப்ப மனுக்களை விநியோகம் செய்த காங்கிரஸ் கட்சியினர்! (படங்கள்)

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலைச் சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. திமுக, காங்கிரஸ், பாஜகபோன்ற கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடமிருந்து விருப்பமனுக்களைப் பெற்றுவருகின்றன.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவ. ராஜசேகரன், பொறுப்பாளர் ஆர். தாமோதரன் ஆகியோர் விநியோகம் செய்தனர். இந்நிகழ்வின்போது மாவட்டப் பொருளாளர் ஜியாவூதீன், எஸ்.கே. நவாஸ், எஸ். சரவணன், சி. கண்ணன், தணிகாசலம், கராத்தே ஆர். செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

congress CORPORATION ELECTION
இதையும் படியுங்கள்
Subscribe