மழையில் பாதித்த மக்களுக்கு உணவு வழங்கிய மாநகராட்சி (படங்கள்)

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக்கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், புதுப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் இன்று மதியம் உணவு வழங்கப்பட்டது. அதேபோல், கொளத்தூர் பாலாஜி நகர் மற்றும் குமரன் நகர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.

Chennai rain
இதையும் படியுங்கள்
Subscribe