Advertisment

தமிழ்நாட்டில்கடந்த வாரங்களில் கரோனா நோயின் தாக்கம்மக்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடர்ந்து வேண்டுகோள் வைக்கப்பட்டுவந்தது.

அதன் அடிப்படையில் பலரும் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று (04.06.2021) காலை மாநகராட்சி கமிஷனரும், காவல்துறை கமிஷனரும் ஆய்வுசெய்தனர். பின்னர் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியைப் பார்வையிட்டனர்.