கரோனா பாதிப்புள்ள ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும்." இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம்,ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தமூன்று மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

 What makes Erode separate?

===========

ஈரோட்டில் சென்ற 11 ஆம் தேதி இரவு தாய்லாந்தை சேர்ந்த7 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஈரோட்டில் கொல்லம்பாளையத்தில் உள்ளஇரண்டு மசூதிகளில் தங்கி மதப்பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்களில் ஒருவர் கடந்த 16 ஆம் தேதி ஊருக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து இந்த ஆறு பேர் பற்றிய விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது அதைத் தொடர்ந்து அந்த 7பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

அவர்களுடைய இரத்த மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில்இருவருக்குகரோனாஅறிகுறி இருப்பதுதெரிய வந்தது.இந்த 7 பேரில்ஏற்கனவே கோவைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற ஒருவர் இறந்துள்ளார். அவர் சிறுநீர் கோளாறால் இறந்ததாககூறப்பட்டது. மீதம் இருந்த6 பேரில் 2 பேருக்குகரோனாஅறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisment

இதுகுறித்து நேற்றுஈரோடு கலெக்டர் கதிரவன் கூறுகையில், மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அரசின்கரோனாதடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். தாய்லாந்து நபர்கள் இருவர் தங்கியிருந்த மசூதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பொதுமக்கள் என அனைவரையும் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஎன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்தமத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்தால் தான் அடுத்த நடவடிக்கை என்னஎன்பதை தெரிவிக்க முடியும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தற்பொழுதுதெரிவித்துள்ளார். இந்த மூன்று மாவட்டங்களிலும்ரயில், பேருந்து போன்ற எந்த பொது போக்குவரத்து சேவைகளும் நடைபெறாது மார்ச் 31ம் தேதி வரை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.