/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SADFJG_0.jpg)
தமிழகத்தில் கரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும்பல முயற்சிகளை எடுத்தும் கட்டுப்படுத்த முடியாமல் சமுதாய பரவலாக மாறியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் வரிசையில் உள்ளது. ஜூன் 20ஆம் தேதி மதியம் 12 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 130 கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 56 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள், 10க்கும் மேற்பட்டோர் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், 5 பேர் கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள்.
ஜூன் 20-ஆம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 1,009 நபர்கள். இதில் 440 நபர்கள் குணமடைந்து தங்களது வீடுகளுக்குதிரும்பினர், மற்றவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திருவண்ணாமலை நகரில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகம் போளூர் ஆரணி வந்தவாசி செய்யார் நகரங்களில் உள்ள தாலுகா மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 130 பேர் கரோனாநோயாளிகளாககண்டறியப்பட்டுள்ளனர். இந்த செய்திதிருவண்ணாமலை மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)