Advertisment

தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

CORONAVIRUS VACCINES MEGA CAMP IN TAMILNADU

Advertisment

தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மெகா கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. இன்றிரவு 07.00 மணி வரை 40 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிப் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3.68 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ள நிலையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவிருக்கிறது.

சென்னையில் 15 மண்டலங்களில் 1,600 சிறப்பு முகாம் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தடுப்பூசி முகாம் இடங்களை மக்கள் அறிந்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில்தற்போது 30 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் இன்னும் 18 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. மெகா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மருத்துவத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamilnadu vaccines coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe