Skip to main content

தொடங்கியது இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை... மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

coronavirus vaccine union health minister visit chenna rajiv gandhi hospital

 

தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான ஒத்திகை இரண்டாம் கட்டமாகத் தொடங்கியது. 

 

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இன்று (08/01/2021) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 மாவட்டங்களில் நடந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 இடங்களிலும் இன்று (08/01/2021) ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

coronavirus vaccine union health minister visit chenna rajiv gandhi hospital

 

நாடு முழுவதும் இன்று (08/01/2021) 736 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கரோனா தடுப்பூசி ஒத்திகையில் என்னென்ன நடக்கும்? 

ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு 100 தடுப்பூசிகளைப் போட எவ்வளவு நேரம் ஆகும் என ஒத்திகை பார்க்கப்படும். தடுப்பூசி ஒத்திகையில் காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை போன்றவை ஒத்திகைப் பார்க்கப்படும். கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது உள்ளிட்டவைப் பற்றி ஒத்திகைப் பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நேர்ந்த விபரீதம்; நோயாளி வெறிச் செயல்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

chennai rajiv gandhi general hospital trainee doctor surya incident

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருபவர் சூர்யா. இவர் நேற்று இரவு நேரப் பணியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக பாலாஜி என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மருத்துவர் சூர்யா மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.

 

அப்போது பாலாஜிக்கு குளுக்கோஸ் செலுத்துவதற்காக அவரது கையில் ஊசி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த ஊசியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர் சூர்யாவிடம் பாலாஜி கூறியுள்ளார். அதற்கு மருத்துவர் இன்னும் உங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருப்பதால் ஊசியை அகற்றக் கூடாது என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாலாஜி மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பாலாஜி அங்கு இருந்த கத்தரிக்கோலை எடுத்து சூர்யாவின் கழுத்தில் பலமாக குத்தி உள்ளார். இதனால் சூர்யாவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த  சக மருத்துவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர். நோயாளி ஒருவரால் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டது தொடர்பான தகவல் சக மருத்துவர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை டீன் தேரணி ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது அவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பயிற்சி மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து  பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்குத் திரும்பினர். பாலாஜி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பயிற்சி மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் குத்திய சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ எம்.பி! 

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

Waiko MP who met Nallakannu and inquired about his well-being!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்டத் தியாகியுமான நல்லக்கண்ணு, கடுமையான காய்ச்சல் காரணமாக, நேற்று (01/10/2022) இரவு சென்னை ராஜீவ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரை தனி வார்டில் வைத்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வரும் நல்லக்கண்ணுவை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். 

Waiko MP who met Nallakannu and inquired about his well-being!

அந்த வகையில், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, இன்று (02/10/2022) மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு குறித்து மருத்துவர்களிடம் வைகோ எம்.பி. கேட்டறிந்தார்.  

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ எம்.பி., நல்லக்கண்ணு நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.