கரோனா தடுப்பூசிக் கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரியது தமிழக அரசு.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தடுப்பூசி வழங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது. 5 கோடி கரோனா தடுப்பூசிகளை 90 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும். 5 கோடி தடுப்பூசிகளை வழங்கிட ஜூன் 5- ஆம் தேதி காலை 11.00 மணி வரை ஆன்லைன், ஆஃப் லைன் மூலம் நிறுவனங்கள் டெண்டர் கோரலாம். தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசி விநியோகம் செய்ய சர்வதேச நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளது.
18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு செலுத்த கரோனா தடுப்பூசியைப் பெற டெண்டர் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.