CORONAVIRUS VACCINE PRODUCTION TAMILNADU MINISTER MEET THE= UNION MINISTER

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக டெல்லியில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயலை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்தனர்.

Advertisment

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, "செங்கல்பட்டு கரோனா தடுப்பூசி மையம் தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் விரைவில் தடுப்பூசி உற்பத்திச் செய்யப்படும். தடுப்பூசி மையத்தை நடத்தப் போவது மத்திய அரசா? மாநில அரசா? என்பது ஒரு வாரத்தில் தெரியும். தடுப்பூசித் தயாரிக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்" என்றனர்.